Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் அல்ல: அத்வானி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2011 (18:16 IST)
அண்ணா ஹசாரேவை சந்திக்க வந்த உமா பாரதி திருப்ப அனுப்பப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக கூறியுள்ள அத்வானி, எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் அல்ல என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இணையதளத்தில் எழுதியிருப்பதாவது:

எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் அல்ல.அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து அவமரியாதை உண்டாக்கும் வகையில் கருத்தை பரப்பி வருவோர் ஜனநாயகத்துக்கு எதிரான சேவையில் ஈடுபட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

அரசியல்வாதிகளை புறக்கணித்துவிட்டு அண்ணா ஹசாரேவும், பாபா ராம்தேவும் நிஜத்தில் பெரியளவில் எதுவும் செய்துவிட முடியும் என்று கூறும் அளவுக்கு கணிப்பாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை.

ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து உமா பாரதி வெளியேற்றப்பட்டது குறித்த செய்தி பெரியளவில் பரப்பப்பட்டது குறித்து எந்த ஆச்சரியமும் இல்லை. இதை அண்ணா ஹசாரேயின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களே செய்தனர்.

ஆனால், இச்சம்பவம் குறித்து கேள்விபட்டதும் ஹசாரே பகிரங்கமாக உமா பாரதியிடம் மன்னிப்பு கேட்டது அவரது இயற்கையான நாகரீக குணத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும், அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என்ற கருத்தை ஹசாரே நம்பவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தில் ஒருசில குறைபாடுகள் இருந்தாலும், எழுச்சிமிக்க அரசியல்வாதிகள் உருவாகி வருவது எதிர்காலம் மீதான மக்களின் நம்பிக்கையை பலப்படுத்துவதாகவே உள்ளது.

இவ்வாறு அதில் அத்வானி எழுதியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments