Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுகிறார்கள் - பிரித்தி ஜிந்தா

Ilavarasan
வியாழன், 15 மே 2014 (15:56 IST)
வக்கிரமனம் படைத்த சிலர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுகிறார்கள் என்று நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளருமான பிரித்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். 


 
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
நான் பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்பதற்காகத்தான் நடிகையானேன். மற்ற எல்லா வேலைகளையும் போலத்தான் நடிப்பும். நான் படங்களில் நடிக்க வந்தபோது இவ்வளவு பெரிய நடிகை ஆவேன் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை.
 
எனது செலவுக்குத் தேவையான பணத்தை சம்பாதித்தால் போதும் என்றுதான் நினைத்தேன். இதுவும் ஒரு வேலைதான். அதற்குரிய சம்பளத்தைத்தான் நான் பெற்றேன். ஆனால் எதிர்பாராத அளவுக்கு நான் பெரிய ஸ்டாராகி விட்டேன். நான் பிரபல நடிகையாக மாறியதும் எனது சுயத்தை அனைவரும் மறந்து விட்டனர்.

நான் திரையில் எப்படித் தோன்றுகிறேனோ அதே போலவே பார்க்கின்றனர். எனது வாழ்க்கை மாறி விட்டது. என்னைச் சுற்றியிருந்தவர்களும் கூட மாறிப் போய் விட்டனர். நான் நானாகவே இருக்க முடியவில்லை. என்னுடைய சுயத்தை நானே தேடிக் கண்டுபிடிக்க போராடும்படி உள்ளது. நான் இளமையாகவே இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
 
என்னைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான் சோகமாக இருக்க முடியவில்லை. எனக்கும் சோகம் வரும், அழுகை வரும் என்பதை யாரும் ஏற்க மறுக்கிறார்கள். என்னுடன் டேட்டிங்குக்கு ஆசைப்படும் பலரும் ஈகோ பிடித்தவர்களாக உள்ளனர். அவர்களை விட பிரபலமாக நான் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.
 
சில வக்கிரமனம் படைத்தவர்கள் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுகின்றனர். எனது முகத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிர்வாண உடல்களுடன் சேர்த்து வெளியிடுகின்றனர். என்னை அவமானப்படுத்துகின்றனர். எனது தனித்தன்மையை சிதைக்கின்றனர்.
 
ஆனால் இதுகுறித்து நான் புகார் தெரிவிக்க கூடாது என்றும் அவர்கள் ஆசைப்படுகின்றனர். காரணம், நான் பிரபலம் என்பதால் இதையெல்லாம் சந்தித்துத்தான் ஆக வேண்டுமாம். இது என்ன கொடுமை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments