Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 3 முறை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 3 முறை ஒத்திவைப்பு
, புதன், 29 ஜூலை 2009 (16:02 IST)
மக்களவை இன்று பிற்பகல் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கூடியதும், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், மக்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து அவைத் தலைவர் மீரா குமார் உத்தரவிட்டார்.

அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்றிருந்த பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியுடன் நடத்திய பேச்சுகளுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

பயங்கரவாதப் பிரச்சினையைத் தனியாகப் பிரித்து, அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க அனுமதித்ததன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விட்டுக்கொடுத்ததாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குறைகூறின.

Share this Story:

Follow Webdunia tamil