Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் வன்முறை மிகுந்த நாடுகளில் இந்தியாவிற்கு தனி இடம்

உலகின் வன்முறை மிகுந்த நாடுகளில் இந்தியாவிற்கு தனி இடம்
, புதன், 12 ஜூன் 2013 (18:21 IST)
FILE
உலகளவில் நடத்தப்பட்ட குளோபல் பீஸ் இன்டெக்ஸ் (ஜிபிஐ) எனப்படும் உலக அமைதி குறியீடு கணக்கெடுப்பில் உலகின் வன்முறை நிறைந்த நாடுகளுள் இந்தியா தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

குளோபல் பீஸ் இன்டெக்ஸ் உலகின் வன்முறை நிறைந்த நாடுகள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. மொத்தம் 161 நாடுகள் இந்த கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் இந்தியா 141 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2011 ஆம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை ஒப்பிடும்போது, இந்தியா இந்த வருடம் மேலும் 3 இடங்கள் முன்னேறி, வன்முறை மிகுந்த நாடு என்னும் பெயரை பெற்றுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பின் அளவு, தேசிய, சர்வதேச பிரச்சனைகளை கணக்கில் கொண்டு நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.

இந்த வரிசையில் இந்தியாவுடன், பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் வன்முறை மிகுந்த நாடுகள் பட்டியலில் இடபெற்றுள்ளன

கணக்கெடுப்பில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு தான் உலகிலேயே மிகவும் வன்முறை நிறைந்த நாடு என்றும் ஐஸ்லாந்து தான் உலகின் மிக அமைதியான நாடு என்றும் தெரிய வந்துள்ளது.

இக்கணக்கெடுப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் வன்முறை காரணமாக சுமார் 799 பேர் உயிரிழந்ததாகவும், இதன்படி நம் நாட்டில் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 2 உயிர்கள் பிரிவதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil