Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உத்தரப்பிரதேசம், கோவாவில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு!

உத்தரப்பிரதேசம், கோவாவில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு!
புதுடெல்லி , வியாழன், 1 மார்ச் 2012 (12:53 IST)
உத்தரப்பிரதேசம்,கோவா மாநிலங்களில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.

உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடைபெறுகிறது.

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 6 கட்ட தேர்தல் அமைதியான முறையில் முடிவடைந்தது.

7 ஆவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் 60 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களாக நடந்த தலைவர்களின் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.வருகிற சனிக்கிழமையன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதேப்போல் கோவா மாநில சட்டசபைக்கும் 3 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.இவைகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இங்கும் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது.அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil