Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர்களுக்கு ரூ.1319 கோடி‌யி‌ல் உத‌வி - ம‌த்‌‌திய அரசு அனும‌தி

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (09:30 IST)
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு 49 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ.1,319 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செ‌‌ய்து‌ள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெ‌ற்ற அமை‌ச்சரவை கூ‌ட்ட‌த்‌தி‌ல், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க இந்திய அரசு உதவி செய்யும் என்று இலங்கை பிரதமர் ராஜபக ்ச‌விட‌ம் அ‌ளி‌த்த உறுத ிமொ‌ழி‌யி‌ன் அடிப்படையில் அங்கு தமிழர்களுக்கு 49 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு ரூ.1,319 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மற்றும் மத்திய, உவா மாகாணங்களிலும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக 38 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். சேதம் அடைந்த 5 ஆயிரம் வீடுகள் பழுது பார்க்கப்படும். ஆதரவு இன்றி தனியாக இருக்கும் பெண்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் வீடுகளை அவர்களாகவே கட்டிக் கொள்ளலாம், வீடு கட்டுவது மற்றும் வீடுகளை பழுது பார்ப்பதற்கான பணம், அந்த பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்படும ்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசு ஏற்கனவே ரூ.500 கோடி வழங்கி உள்ளது. வடக்கு பகுதியில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்து உள் ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப ்‌பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments