Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி மொபைலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

இனி மொபைலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
, புதன், 12 ஜூன் 2013 (11:12 IST)
FILE
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை மொபைல் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) திட்டமிட்டுள்ளது.

வளர்ந்து வரும் மொபைல் சந்தையை கருத்தில் கொண்டு, மொபைல் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்த உள்ளது.

இத்திட்டம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான பிரத்யேக எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிவிக்கும். இந்த வசதியை பயன்படுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், தங்களது செல்போன் எண்ணையும், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரையும் ஐ.ஆர்.சி.டி.சி.யில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

டிக்கெட் கட்டணத்தை கழித்து கொள்வதற்காக, வங்கிகள், இந்த வசதிக்கு தேவையான எண்கள் மற்றும் தகவல்களை பயணிக்கு வழங்கும்.

முன்பதிவு செய்ய விரும்பும் பயணி, சம்பந்தப்பட்ட ரயிலின் எண், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற விவரம், பயண தேதி, பயண வகுப்பு மற்றும் பயணிகளின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை ‘டைப்’ செய்து எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

உடனே அவரது செல்போனுக்கு ஒரு பரிவர்த்தனை ஐ.டி. வரும். அதைத்தொடர்ந்து, டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த மற்றொரு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.உடனே, அவரது டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக ஒரு எஸ்.எம்.எஸ். வரும். பயணத்தின்போது, அந்த எஸ்.எம்.எஸ்.சை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தால் போதுமானது.

ஒரு எஸ்.எம்.எஸ்.சுக்கு 3 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அதைத்தவிர, பணம் செலுத்துவதற்கான கட்டணமாக, ரூ.5 ஆயிரம் வரையான டிக்கெட்டுகளுக்கு 5 ரூபாயும், ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 10 ரூபாயும் பிடிக்கப்படும்.

இந்த வசதியை அனைத்து மொபைல் சந்தாதாரர்களும் பயன்படுத்தலாம். எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil