Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய பகுதியில் பாக்., சீனா ஆக்கிரமிப்பு: பிரனீத் கவுர்

இந்திய பகுதியில் பாக்., சீனா ஆக்கிரமிப்பு: பிரனீத் கவுர்
புதுடெல்லி: , புதன், 15 ஜூலை 2009 (17:01 IST)
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர் கூறினார்.

மக்களவையில், உறுப்பினர் தேஷ்முக்கின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் பிரனீத் கவுர் கூறியதாவது:

கடந்த 1948ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் சுமார் 78 ஆயிரம் சதுர கி.மீ. அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கடந்த 1962ம் ஆண்டில் இருந்து சுமார் 38 ஆயிரம் சதுர கி.மீ. இடத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லை ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், சுமார் 5 ஆயிரத்து 180 ச.கி.மீ. இடத்தை பாகிஸ்தான் சீனாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. இதன் மூலம் எல்லை ஒப்பந்தம் என்பது பயனில்லாத ஒன்று என்பதே அரசின் தற்போதைய நிலையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil