Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு எதிராக ஈடுபட்டால்...... பிரதமர் எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிராக ஈடுபட்டால்...... பிரதமர் எச்சரிக்கை
, புதன், 4 ஏப்ரல் 2012 (20:16 IST)
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீத் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 50 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுக்குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த விவகாரம் குறித்து வரும் ஞாயிற்றுக் கிழமை இந்தியா வரும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் விவாதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹஃபீஸ் சயித் தலைமையிலான லஷ்கர்- இ- தொய்பா அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என்று 2001-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. மேலும், 6 அமெரிக்க குடிமக்கள் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர் சயீத் என்றும் அமெரிக்க ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News Summary:
With the US announcing a USD 10 million bounty on Mumbai attack mastermind Hafiz Saeed, Prime Minister Manmohan Singh on today said those engaged in terror acts against India should be brought to book.

Share this Story:

Follow Webdunia tamil