இந்தியாவின் அக்னி1, ஏவுகணை சோதனை வெற்றி
, புதன், 12 டிசம்பர் 2012 (12:23 IST)
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரியின் இலக்கை 700 கீ.மீ தூரத்திலிருந்து அழிக்கும் வள்ளமை பெற்ற அக்னி1 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.ஒடிசா கடற்கரையிலிருந்து இன்று காலை 8.30 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 700 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 1 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.தரையில் இருந்து 1 டன் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து சென்று 700 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்லது அக்னி 1 ஏவுகணை. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இது 15 மீட்டர் நீளம், 12 டன் எடை கொண்டதாகும். .