Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பித்துவிட்டார் ராமராஜ்ஜியம் பேச்சை மோடி!

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2013 (19:36 IST)
உத்திரப்பிரதேசத்தில் இதுவரை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பாஜகவின் தலையாய கருத்தியலான ராமராஜ்ஜியம் பேச்சை மோடி தவிர்த்து வந்தார்.
FILE

இந்நிலையில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ராமர் கோவில் விவகாரத்தை மறைமுகமாக தொட்டுப் பேசினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் சரியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதன் மூலம் "ராம ராஜ்ஜியத்தை" மீண்டும் கொண்டு வரலாம் என்று அவர் பேசினார்.

இம்மாநில மக்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களின் முன்னோர்கள் இங்கு ராம ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளனர். ராம ராஜ்ஜியம் என்பத ு...

FILE
உங்கள் ராஜ்ஜியம். எனவே அதை மறுபடியும் நிறுவ நீங்கள் முன்வரவேண்டும்.

இங்கு இன்னும் பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. நீங்கள் சரியான நபரை தேர்ந்தெடுக்காததே அதற்கு காரணம். உங்களது தாயான கங்கை நதியை பாருங்கள். எவ்வளவு மாசுபட்டிருக்கிறது. குஜராத்தில் பத்து வருடங்களுக்கு முன் மாசடைந்து கிடந்த சபர்மதி ஆற்றை எங்கள் அரசு சுத்தப்படுத்தியுள்ளது. ஆனால் இங்கு கங்கை இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை. சுத்தம் செய்வதாகக் கூறி நிதி ஒதுக்கி அதிலும் ஊழல் செய்துள்ளனர்.

நாட்டில் ஊழலும், வேலைவாய்ப்பின்மையும், வறுமையும் தலைவிரித்தாடுவதற்கு நேரு குடும்பமும் காங்கிரஸ் கட்சியுமே முழு முதற்காரணம். மன்மோகன் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறார். ஆனால் எங்கள் கட்சி சாத்தியமான வாக்குறுதிகளை கொண்டே மக்களை அணுகிவருவகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments