Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம் ஆத்மி வழியில் பாஜக; நரேந்திர மோடியுடன் சாப்பிட ரூ.25 லட்சம்

ஆம் ஆத்மி வழியில் பாஜக; நரேந்திர மோடியுடன் சாப்பிட ரூ.25 லட்சம்
, சனி, 15 மார்ச் 2014 (15:25 IST)
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சாப்பிட தொகை நிர்ணயம் செய்து கட்சி நிதி திரட்டியது ஆம் ஆத்மி கட்சி. அதே வழியில் பாஜகவும் நரேந்திர மோடியுடன் சாப்பிட கட்டணம் நிர்ணயித்து வசூல் வேட்டையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.
FILE

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று வருகிற 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மோடியுடன் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் கொடுப்பவர்கள் மோடி அருகில் உட்கார்ந்து சாப்பிடலாம். இந்த திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு அன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil