Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் ஆந்திர முதலமைச்சர் மனைவி

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (04:19 IST)
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்ததால், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
 
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான  வீடு ஐதராபாத்தில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மனைவி புவனேஸ்வரியுடன்  வசித்து வருகின்றார். தினசரி, தனது வீட்டில் உடற்பயிற்சி செய்வதை புவனேஸ்வரி வழக்கமாக கொண்டுள்ளார்.
 
இந்நிலையில், புவனேஸ்வரி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருடைய வலது கை  மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
 
வலியால் அலறித்துடித்த அவரை, உடனே, ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இந்த தகவல் அறிந்த,  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  அவருடைய மகன் லோகேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, புவனேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர். மேலும், அவருக்கு ஆறுதல் கூற அவரது உறவினர்களும், முக்கிய கட்சி நிர்வாகிகளும் மருத்துவ மனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். 
 
இந்நிலையில், புவனேஸ்வரி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments