Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவைச் சிகிச்சைக்கு பின் 17 கிலோ எடை குறைந்த அருண் ஜெட்லி

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (16:29 IST)
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,  நீரிழிவு மேலாண்மை அறுவைச் சிகிச்சைக்கு பின் 3 வாரங்களில் 17 கிலோ எடை குறைந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
நீரிழிவு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லிக்கு, நீரிழிவு மேலாண்மை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 
 
அறுவைச் சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலையை பரிசோதிக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெட்லியின் உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளதாகவும், அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அறுவைச் சிகிச்சைக்கு பின் ஜெட்லி 3 வாரங்களில் 17 கிலோ குறைந்துள்ளதாகவும், அவரது உடலில் கிரியாடினின் அளவு குறைந்துள்ளதால் சிறுநீரக செயல்பாடு நன்றாக உள்ளதாகவும் தெரிவித்த மருத்துவர்கள், நாளை ஜெட்லி வீடு திரும்பிவாரென குறிப்பிட்டுள்ளனர். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments