Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது துரதிருஷ்டவசமானது: அன்னா ஹசாரே கருத்து

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது துரதிருஷ்டவசமானது: அன்னா ஹசாரே கருத்து
, சனி, 15 பிப்ரவரி 2014 (10:53 IST)
டெல்லி சட்டப்பேரவையில் ஜன்லோக்பால் நிறைவேற்றப்படாததை அடுத்து ,டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று டெல்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து தனது மந்திரிசபையின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர், ராஜினாமா குறித்து ஜனாதிபதியின் முடிவு வரும் வரை மேலும் 5 நாட்கள் பதவியில் நீடிக்கும்படி டெல்லி மாநில அரசை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
FILE

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து டிவிட்டரில் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு

அன்னா ஹசாரே:லோக்பால் மசோதா மிக முக்கியமானது.அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது மிகவும் துரதிருஷ்டவசமானது.

லாலுபிரசாத் யாதவ்:அரவிந்த் கெஜ்ரிவால் தான் கொடுத்த வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டார்.எனவே பொறுப்புகளில் இருந்து தப்பிக்க ராஜினாமா செய்துள்ளார்.

பாரதீய ஜனதா தலைவர் ரவிசங்கர் பிரசாத்: ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற பாரதீய ஜனதா முழு ஆதரவை அளித்தது.ஆனால் இதை நிறைவேற்ற சட்டவிதிகளை பின்பற்றியிருக்க வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil