Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகாரப்பகிர்வே அரசியல் தீர்வு : ராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம்

அதிகாரப்பகிர்வே அரசியல் தீர்வு : ராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம்
webdunia photo
FILE
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்துவிட்டு தற்போது, அதனை சாந்தப்படுத்தும் வகையில் ராஜபக்சேவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நடுநிலையாக கொண்டுவர, இந்தியா பாடுபட்டதாகவும், அதேசமயம் இந்தியா நடுநிலையாக செயல்பட்டதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நிலையான, பாதுகாப்பான இலங்கையை உருவாக்க இந்தியா தொடர்ந்து உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

மேலும், தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிப்பதே அரசியல் தீர்வாக அமையும் என்றும், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் அதிபர் ராஜபக்சே முனைப்புடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும், அந்த கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

News Summary: Prime Minister Manmohan Singh wrote to President Mahinda Rajapaksa, telling him that India made all efforts and succeeded in introducing an “element of balance” in the U.S.-sponsored resolution.

Share this Story:

Follow Webdunia tamil