Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த வாரம் உ.பி. செல்கிறார் ராகுல்

அடுத்த வாரம் உ.பி. செல்கிறார் ராகுல்
, செவ்வாய், 1 டிசம்பர் 2009 (13:00 IST)
அமேதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளருமான ராகுல்காந்தி அடுத்த வாரம் 2 நாள் பயணமாக உத்தரப்பிரதேச மாநிலம் செல்லவிருக்கிறார்.

உ.பி-யில் இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் அதிகளவில் சேர்க்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக ராகுல் அங்கு செல்கிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தரப்பிரதேசத்தில் அடங்கிய 26 மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. வரும் 9 ஆம் தேதி வரை இளைஞர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்தப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் ராகுல் காந்தி அடுத்தவாரம் அங்கு செல்லவிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, உ.பி-யில் வரும் 2012ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

Share this Story:

Follow Webdunia tamil