Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி இரு தொகுதிகளிலும் முன்னிலை

Ilavarasan
வெள்ளி, 16 மே 2014 (10:18 IST)
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
 
வாரணாசி, வதோதராவில் நரேந்திர மோடி முன்னணியில் இருக்கிறார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதராவிலும், உ.பி. மாநிலம் வாரணாசியிலும் போட்டியிட்டார்.
 
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே நரேந்திர மோடி 2 தொகுதியிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
 
வதோதராவில் முதல் ரவுண்டு வாக்கு எண்ணிக்கை முடிவில் நரேந்திர மோடி காங்கிரஸ் வேட்பாளரை விட 170000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.
 
லக்னோ தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முன்னணியில் இருக்கிறார்.
 
பாஜக மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் முன்னணியில் இருக்கிறார்.
 
பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்டார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் சிங்கைவிட 3,552 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com
 
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm
 
LIVE Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/Live-Lok-Sabha-Election-Results-2014-map.htm

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments