Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்யா மீது புகார் அளித்த காங்கிரஸ் கட்சியினர்?

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2013 (11:51 IST)
FILE
கர்நாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ரம்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் இந்திய நடிகையான ரம்யா, தற்போது மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் மீது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரிடம் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாண்டியா மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் உள்பட சில நிர்வாகிகள் அக்கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரை சந்தித்து ரம்யா மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது.

அந்த புகாரில், ரம்யா இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாஜக பெண் நிர்வாகி ஒருவரை சந்தித்துள்ளார். இது குறித்து கேட்டதற்கு அவர் ஒழுங்கான பதில் அளிக்கவில்லை. மாறாக அரசு அதிகாரிகளுக்கு சரியான மரியாதை அளிக்காமல் அவர்களை ஒருமையில் அழைக்கிறார்.

மேலும், தொகுதியில் எந்த முடிவு எடுத்தாலும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு செய்யாமல் செயல்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பொதுமக்களுக்கு குடிநீர் வர நடவடிக்கை எடுக்காத ஹனுமந்தையா என்னும் பொறியாளரை வரவழைத்து விளக்கம் கேட்ட ரம்யா அவர் சரியான விளக்கம் தராததால் அவரை 'முட்டாள்' என்று திட்டினார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

Show comments