Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:32 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஊழல் கறை படிந்த 160 வேட்பாளர்களை எதிர்த்து வலுமிக்க ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
FILE

இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநிலம் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. அந்த வேட்பாளர்கள் பற்றிய கருத்தை உடனே அனுப்பும் படி வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது. வாக்காளர்கள் அளிக்கும் பதில் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லியில் வடமேற்கு டெல்லி தொகுதி தவிர மற்ற 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
webdunia
FILE

மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளில் மும்பை, நாக்பூர், தானே, புனே, நாசிக் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் 162 எம்.பி.க்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளனர். இந்த 162 பேரையும் எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்கப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil