Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சார் செயலிழப்பு: சந்திரயான்-1 திட்டம் தோல்வி?

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2009 (12:43 IST)
இந்தியாவின் மிகப்பெரிய கனவு விண்வெளித் திட்டமான சந்திரயான் - ஒன்று செயற்கைக்கோளில் உள்ள ஸ்டார் சென்சார்ஸ் கருவி ( Stars sensors) தோல்வியடைந்திருப்பதால், இந்த செயற்கைக்கோள் முன் கூட்டியே செயலிழக்கக்கூடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயானில் இடம்பெற்றுள்ள ஸ்டார் சென்சார் கருவியானது செயல்படாமல் போனதால், இத்திட்டம் முன் கூட்டியே முடிவுக்கு வரும் என்று பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் எஸ். சதீஷ் தெரிவித்துள்ளார்

சந்திரனை ஆய்வு செய்வதில் ஸ்டார் சென்சார் மிக முக்கியப் பங்காற்றக்கூடியவை. அவை செயலிழந்து விட்டதையடுத்து, ஆண்டனா தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அதனை சரி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும் எவ்வளவு காலம் அதனை நிலைநிறுத்த முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரயான் ஒன்று செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அது தற்போது குறையலாம் என்று தெரிய வந்துள்ளது.

என்றாலும் தற்போது வரை சந்திரயான் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று சந்திரயான்-ஒன்று செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments