Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சகிப்புத்தன்மையற்ற நிலையை நோக்கி இந்தியா செல்கிறது- சல்மான் ருஷ்டி

சகிப்புத்தன்மையற்ற நிலையை நோக்கி இந்தியா செல்கிறது- சல்மான் ருஷ்டி
, புதன், 25 ஜனவரி 2012 (10:02 IST)
இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது என்றும் சகிப்புத் தன்மையும் அருகி வருகிறது என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்வதைத் தடுத்துடன், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுவதற்கும் அனுமதிக்காமல் இருந்ததற்காக இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் சல்மான் ருஷ்டி.

ஜெய்ப்பூர் போலீஸார் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், தான் கலந்து கொண்டால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உத்தேசித்து பெரும் பிரச்னைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறினர்.

அதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தலால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுவதற்கு எண்ணினேன். ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலருக்காக போலீஸார் அதையும் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இந்தியா எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. சீனா போன்று இந்தியாவிலும் பேச்சு சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.

சகிப்புத் தன்மையற்ற கட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று தனது டிவிட்டர் பக்கத்திலும், தனியார் தொலைக்காட்சி பேட்டியிலும் சல்மான் ருஷ்டி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil