Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலவசங்கள் வேண்டுமா? வேண்டாமா? - விதிமுறைகளை வகுக்கும் தேர்தல் ஆணையம்

இலவசங்கள் வேண்டுமா? வேண்டாமா? - விதிமுறைகளை வகுக்கும் தேர்தல் ஆணையம்
, திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (17:22 IST)
FILE
தேர்தல் நடைபெறும் சமயங்களில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து இன்று தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி ஆலோசனை நடத்தியது.

உச்சநீதிமன்றம் மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளை நெறிப்படுத்த விதிமுறைகளை உருவாக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையம், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்ற இக்கூட்டம் இன்று டெல்லியில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்ட தேர்தல் ஆணையம், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் இலவச பொருட்கள் சார்ந்த வாக்குறுதிகள் பற்றி ஆலோசித்தது.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை அளிப்பதாக தெரிவிப்பதால் மட்டும் ஒரு அரசியல் கட்சி வெற்றிப்பெற்று விட முடியாது, இலவச திட்டங்களால் மாநில அரசின் மற்ற வளர்ச்சி திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது, மக்களுக்கு தேவையான பொருட்களை அரசியல் கட்சிகள் வழங்குவதில் தவறில்லை போன்ற கருத்துக்கள தேர்தல் ஆணையத்தின் முன்வைக்கப்பட்டது.

இந்த பரிந்துரைகள் மீது தேர்தல் ஆணையம் விரிவான ஆய்வு மேற்கொள்ளும் என தெரிகிறது. அதன் அடிப்படையில் இலவச திட்டங்களை அறிவிப்பதற்கான விதிமுறைகள் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil