Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும்: தாவூத் இப்ராகிம்

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2011 (18:38 IST)
தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத்,அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்.

அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது.

இந்நிலையில்,கடந்த மே மாதம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு நடத்தி வைத்தான்.

தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளார்.

மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments