Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிவேல் - திரைவிமர்சனம்

வெற்றிவேல் - திரைவிமர்சனம்
, வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (18:49 IST)
அறிமுக இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு, சமுத்திரகனி, தம்பி ராமைய்யா நடித்த வெற்றிவேல் திரைப்படத்தை அப்துல் லத்தீப் தயாரித்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்த இந்த படத்துக்கு, டி இமான் இசை அமைத்து ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.


 
 
கிராமத்து கதைகளத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சசிகுமாரின் மற்றொரு சுந்தரபாண்டியன் எனலாம். காதல், பாசம், குடும்பம் என கிராமத்து வாசனையை கொஞ்சம் அதிகமாகவே தூவி வீசியிருக்கிறார் அறிமுக இயக்குனர் வசந்தமணி.
 
ஊரில் உரக்கடை நடத்தி வரும் சசிகுமாருக்கும், விவசாயத் துறை அதிகாரியாக வரும் நாயகி மியா ஜார்ஜுக்கும் இடையே காதல் மலர்கிறது. நாயகி மியா ஜார்ஜ் கவர்ச்சி இல்லாத அழகிலும், நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
 
ஊர் பஞ்சாயத்து தலைவரான பிரபுவின் மகளை காதலிக்கிறார் சசிகுமாரின் தம்பி. தம்பியின் காதலுக்கு உதவ போய் யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்யும் சூழல் வருகிறது சசிகுமாருக்கு. சசிகுமார், மியா ஜார்ஜ் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.
 
சசிகுமார் படங்களில் வழக்கமாக அவருக்கே உரித்தான பாணியில் இருக்கும் வசனங்கள் இந்த படத்திலும் வருகின்றன. பிரபு, தம்பி ராமையா போன்றோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு சிறப்பு. தம்பி ராமையா காமெடி காட்சிகளில் கலக்குகிறார்.
 
டி இமான் இசை கேட்க்கும் விதமாக உள்ளது, ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் கிராமத்து காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார். ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாரு பயணிக்கிறது.
 
படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. குடும்பத்துடன் சென்று படம் பார்க்கும் விதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் வசந்தமணி. வெற்றிவேல்.... குடும்ப வேல்....

Share this Story:

Follow Webdunia tamil