Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலி விமர்சனம்

புலி விமர்சனம்

Ashok

, வியாழன், 1 அக்டோபர் 2015 (14:45 IST)
புலி படம் கமர்ஷியல் பிரம்மாண்டம், இந்த பிரம்மாண்டத்தி்ல் நட்சத்திரங்கள் பட்டாளம். விஜய் வழக்கமான தன்னுடைய நடிப்பை வெளிபடுத்திருக்கிறார். இயக்குனர் சிம்புதேவன் முந்தைய படங்களை போன்றே காமடி கலந்த நகைச்சுவை உணர்வுடன் கூடிய ராஜா காலத்து சினிமாவை காட்டியுள்ளார்.


 

 
வேதாளக்கோட்டையுடன் ஆரம்பிக்கிறது புலி படம். அந்த கோட்டைக்கு ராணியாக ஸ்ரீதேவி வருகிறார். ஸ்ரீதேவி ராணியாக நடந்து வரும் காட்சியில் தன்னுடைய பழைய படங்களில் இருந்து வித்தியசமான அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேதாளக்கோட்டையின் தளபதியாகவும், வில்லனாகவும் வருகிறார் சுதீப்.
 
எல்லா தமிழ் சினிமாவின் வில்லன் போன்றே தன்னுடைய நாட்டுமக்களை அடிமைப்படுத்தி, அவர்களை கொடுமை படுத்தி வருகிறார் சுதீப். வேதாளக்கோட்டையின் அருகில்  கிராமத்தில் வசிக்கும் பிரபு, தன்னுடை நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். ஒரு நாள் வேதாளக்கோட்டைக்கு தன்னுடைய ஆட்களுடன் செல்கிறார்.

அப்பொழுது ராணி ஸ்ரீதேவியை சந்தித்து நாட்டில் நடக்கும் கொடுமைகளை சொல்கிறார். இந்த இடத்தில் பழைய ராஜா காலத்து படம்போல் சுதீப் ராணியின் கெட்டப்பில் உருவம் மாறுகிறார். ஆனால் பிரபு இதுப்பற்றி எதுவும் தெரியததால் எல்லாவற்றையும்  தளபதி சுதீப்பிடம் சொல்லிவிடுகிறார். கடைசியில் பிரபு உடன் வந்தவர்களை அடித்து விரட்டுகிறார். பின்னர் பிரபுவின், கையையும் வெட்டி விடுகிறார்.

webdunia

 

 
இதற்கிடையில், வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, வேதாளமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த வேதாளம் எல்லாம் ஒருவித விசித்திர சக்தியை பெறுகிறார்கள். இந்த வேதாளங்களுக்கு வித்தியசமான உருவங்கள்,ராட்சத பல் போன்றவை இருக்கிறது. இந்நிலையில்,. 
ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையாக விஜய் வளர்கிறார். இந்த குழந்தையை வளர்த்து வருகிறார் பிரபு. வளர்ந்து பெரியவனாகும் விஜய், அந்த கிராமத்தில் தம்பிராமையா, சத்யன் ஆகியோருடன் சேர்ந்து வழக்கும்போல் கூத்தும் கும்மாளமுமாக இருந்து வருகிறார். மேலும், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் ஸ்ருதிஹாசனை சிறுவயதில் இருந்து காதலிக்கிறார்.
 
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் வெளியூருக்கு படிக்க செல்கிறார்.  ஒரு நாள் வேதாளங்களுடன் சுதீப்பின் படை வீரர்கள் வரி வசூல் செய்ய இவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களிடம் பிரச்சினை செய்யாமல், அனைவரும் அடிபணிந்து வரி கொடுத்துவிடுகின்றனர். 
 
பின்னர், ஸ்ருதிஹாசன் முன்னால். வேதாளங்கள் படை வீரார்களுடன் சண்டை போடுகிறார் விஜய். இதனால், விஜய் மீது காதலில் விழ, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால்,  வேதாளங்களின் படை வீரர்கள் போல் தயார் செய்து, அவர்களை விஜய் அடித்து துவம்சம் செய்வதுபோல் பிரபு நாடகம் நடத்தியது ஸ்ருதிஹாசனுக்கு தெரியவில்லை.
 
இதனை அறிந்த,சுதீப்பின் வேதாள படை வீரர்கள் ஊருக்குள் புகுந்து, விஜய் கிராமத்து மக்களை அடித்து துவம்சம் செய்து விட்டு, பிரபுவையும் கொன்று விடுகின்றனர். மேலும், ஸ்ருதிஹாசனையும் அந்த படை வீரர்கள் கடத்தி சென்று விடுகின்றனர். 
 
வழக்கமான தமிழ் சினிமா போன்று விஜய், ஸ்ருதிஹாசனை மீட்கவும், மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கவும் வேதாள கோட்டைக்கு புறப்படுகிறார். அப்போது, அந்த ஊர் வைத்தியரான ஜோ மல்லூரி, தான் கண்டுபிடித்து வைத்திருக்கும் மூலிகையை உண்டால், 8 நிமிடங்கள் வரை வேதாளமாக இருக்கமுடியும் என்று விஜயிடம் கூறுகிறார். இந்த மருந்தை அருந்திக்கொண்டு விஜய் வேதாளக் கோட்டைக்கு செல்கிறார்.
 
பின்னர் வேதாளக்கோட்டை நோக்கி செல்லும் வழியில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார். இறுதியில் வேதாளக்கோட்டையை அடைந்தி விடுகிறார். அந்த கோட்டையில் இருந்து ஸ்ருதிஹாசனை எப்படி மீட்கிறார்  என்பது மீதி கதையாகும். மொத்ததில் இந்த படம் தமிழ் சினிமாவின் ராஜா காலத்து  பூத படங்கள் போல் இருக்கிறது.
 
அந்த கோட்டையில் ஸ்ரீதேவியின் மகளாக இளவரசி வேடத்தில் வருகிறார் ஹன்சிகா. ஸ்ருதிஹாசனின் அளவுக்கு மீறிய கவர்ச்சி பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
 
ஹன்சிகா, இளவரசியாக தனக்குரிய அழகில் அனைவரையும் கவர்கிறார். அளவான கவர்ச்சியுடன் இவருடைய நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. 
 
தளபதியாக வரும் சுதீப், தன்னுடைய பார்வையில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார்.  கோலிவுட்டில், நான் ஈ க்கு பிறகு இந்த படமும் அவருக்கு  மீண்டும் சிறந்த வில்லன் என்ற பெயரை பெற்றுதந்துள்ளது. படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டுவதற்காக கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். படத்தில் நிறைய காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு சில காட்சிகள் அவை கிராபிக்ஸ்தான் என்பது தெரிந்து விடுவது மைனஸ்.படத்தின் வசனங்களில் சில தடுமாற்றம்.கதாபாத்திரங்கள் சிலர் நகைசுவைக்காக சில வசனங்களை பேசி இருப்பது கொஞ்சம் சொதப்பல்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘புலி புலி’, ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’ ஆகிய பாடல்கள் திரையரங்கில் ரசிகர்களை எழுந்து நின்று  ஆட்டம் போட வைத்திருக்கிறது. 
 
‘ஏண்டி ஏண்டி’ என்ற அழகான மெலோடி பாடலை காட்சிப்படுத்திய விதத்தில் நட்டி நடராஜ் தன்னுடைய  ஒளிப்பதிவு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், இயக்குனர் சிம்புதேவனும், ஒளிப்பதிவாளர் நட்டி மற்றும் கலை இயக்குனர் முத்துராஜும் இணைந்து பிரம்மாண்ட ஒரு மாயஜால உலகை படைத்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil