Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கண்ணே கலைமானே' திரைவிமர்சனம்

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (20:01 IST)
உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைப்பது என்பது இயக்குனர்களுக்கு ஒரு பெரிய சவால். இந்த சவாலை 'மனிதன்' படத்தில் சிறப்பாக இயக்குனர் அகமது சரியாக செய்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் சீனுராமசாமியும் அருமையாக செய்துள்ளார்.
 
மதுரை அருகே உள்ள கிராமத்தில் விவசாய பட்டப்படிப்பு படித்த உதயநிதி சொந்த ஊர் விவசாயிகளுக்காக பல்வேறு உதவிகளை செய்கிறார். குறிப்பாக இயற்கையான மண்புழு உரங்களை உற்பத்தி செய்து செயற்கையான கெமிக்கல் உரங்களை கைவிடுமாறு அறிவுரை கூறுகிறார். அந்த ஊரின் வங்கிக்கு மேனேஜராக வரும் தமன்னா, வங்கியில் லோன் வாங்கி கட்டாமல் இருக்கும் உதயநிதியை கடுமையாக திட்டுகிறார். அதன்பின் ஏற்படும் மோதல், பின் காதல், திருமணம், என போகும் கதையில் திடீரென ஒரு சோகம். அந்த சோகம் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பதே இந்த படத்தின் முடிவு
 
வழக்கமான அலட்டல் நடிப்பை கைவிட்டு இயல்பான நடிப்புக்கு மாறியுள்ளார் உதயநிதி. இதேபோன்ற கதையை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் முன்னணி நடிகராகிவிடலாம். ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கமான நடிப்பிலும், செண்டிமேண்ட் காட்சியில் சொதப்பியும் உள்ளார்.
 
தமன்னாவுக்கு இந்த படம் நிச்சயம் நல்ல பேரை பெற்றுத்தரும். தமன்னா என்றால் கவர்ச்சி என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே. முழுக்க முழுக்க குடும்பப்பெண்ணாக அதே நேரத்தில் தனது கேரக்டரின் அழுத்தத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.
 
வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமசாமி, ஆகியோர்கள் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து வரிகளில் அனைத்து பாடல்களும் சூப்பர். கிராமத்து பின்னணி இசையும் அவர் ஒரு இளைய இசைஞானி என்பதை நிரூபிக்கின்றது
 
சீனுராமசாமி குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார். காமெடிக்கு என தனி டிராக் இல்லை, வலிய திணிக்கும் ஆக்சன் காட்சிகள் இல்லை, ஆங்காங்கே நீட், விவசாயி தற்கொலை குறித்த காட்சிகள் என படத்தை நகர்த்தி கொண்டு சென்றுள்ளார். இடைவேளைக்கு பின் படம் கொஞ்சம் மெதுவாக நகருவதை தவிர்த்திருக்கலாம். 
 
மொத்தத்தில் ஒரு குடும்பப்பாங்கான படம்
 
3/5

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்