Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'கத்துக்குட்டி' படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம்

'கத்துக்குட்டி' படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (21:00 IST)
இன்று வெளியாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் 'தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி' எனப் பாராட்டினார்கள். அதுகுறித்த விரிவான விவரம்... 


 
 
நடிகர் சிவகார்த்திகேயன்:
 
''சூரி அண்ணன் ஷூட்டிங்கில் மீட் பண்றப்ப எல்லாம் 'கத்துக்குட்டி' படத்தைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் ரொம்ப நல்ல படம்னு சொன்னதால் நான் வேறுவிதமான கற்பனையோட கத்துக்குட்டி பார்க்க வந்தேன். ஆனால், நல்ல விஷயத்தை பக்கா கமர்ஷியலா சொல்லி கலக்கி இருக்காங்க. நாம சாப்பிட்ற சாப்பாடு எவ்வளவு வலிகளைக் கடந்து நம்ம கைக்குக் கிடைக்குதுங்கிறது இங்கே யாருக்குமே தெரியிறது இல்லை. இந்தப் படத்தோட மையக்கருத்தே இதுதான்.

இவ்வளவு அழுத்தமான கதையை வயிறு வலிக்க சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இருக்கிறது ரொம்ப புதுசா இருக்கு. வாழைப் பழத்துல ஊசி ஏத்துற மாதிரி நம்மளை சிரிக்க வைச்சே விவசாயத்தோட வலியையும் சரியா உணர வைக்கிறாங்க.குறிப்பா சூரி அண்ணன் வர்ற அத்தனை சீனும் வயிறு புண்ணாகிடுது. வசனமும் பாடல்களும் ரொம்ப அற்புதமா இருக்கு. தயவு பண்ணி இந்தப் படத்தைக் குடும்பத்தோட பாருங்க. இந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா, அப்புறம் கையில சாப்பாட்டை எடுக்கிறப்ப எல்லாம் அதை ரொம்ப மரியாதையா பெருமையா பார்ப்பீங்க. நமக்காக எங்கோ வயற்காட்டுல கஷ்டப்படுறவங்களை மனசுக்குள்ள நினைச்சுப் பார்ப்பீங்க. அவசியம் 'கத்துக்குட்டி' பாருங்க..." 

webdunia

 

 
நடிகர் விமல்:
 
‘கத்துக்குட்டி’ படம் ரொம்ப பிரமாதமா இருக்கு, நல்ல கருத்துக்களை நகைச்சுவையோட சொல்லியிருக்காங்க. இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இரா. சரவணன் இயக்கி இருக்கிறார், ஆனா அவர் புதுமுக இயக்குனர் போல தெரியல, பல படங்களை இயக்கின அனுபவம் உடையவர் போல உருவாக்கியிருக்கிறார். மீத்தேன் பிரச்சனையை மிக நாசுக்காகவும், தெளிவாகவும் சொல்லியிருக்காங்க,

தஞ்சை மண்ணின் வாழ்வியல் பதிவுகள் ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. இந்த திரைப்படத்தில் நடித்த நரேன், சூரி, ஸ்ருஷ்டி மற்றும் எல்லா கலைஞர்களும் எதார்த்தமா நடிச்சிருக்காங்க. இது கத்துக்குட்டி இல்ல... கத்துக்குடுக்கிற குட்டி. 100 ரூபாய் பணம் கொடுத்து நாம ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். குடும்பத்தோட பாருங்க. நிச்சயம் கொண்டாடுவீங்க. தயவு பண்ணி மிஸ் பண்ணிடாதீங்க..."
 
நடிகர் சூரி:
 
‘கத்துக்குட்டி’ திரைப்படத்தில நடிச்சது ரொம்ப பெருமையாவும், சந்தோசமாவும் இருக்குது எனக்கு. உங்க மனச தொடுகிற முக்கியமான பத்து படங்கள்ள இந்த கத்துக்குட்டியும் இருக்கும்னு நம்புறேன். உங்கள்ள ஒருவனா  சொல்லுறேன் கத்துக்குட்டி மிக அற்புதமான படம். நிச்சயமா தியேட்டர்ல போயி பாருங்க.
 
இயக்குநர் பொன்ராம்:
 
‘கத்துக்குட்டி’ சூப்பர் எண்டர்டைமன்ட் படம், முதல் பகுதியில சூரி அண்ணனும், நரேனும் கலக்கி இருக்காங்க. அங்கங்க செம காமடியா இருக்கு. ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனையும் இதுல இருக்கு. க்ளைமாக்ஸ் சீன் ரொம்ப சஸ்பன்ஸா இருந்தது. யாராலயும் கணிக்க முடியாத க்ளைமாக்ஸை பிக்ஸ் பண்ணி இயக்குநர் மிரள வைச்சிருக்கார். அருமையான கிளைமேக்ஸ்,  ரொம்ப என்ஜாய் பண்ணி கைதட்டுற கிளைமேக்ஸ். இந்த படம் மிக அற்புதமான கருத்துக்கள் உள்ள எண்டர்டைமன்ட் படம். இப்படி ஒரு அற்புத படைப்பை வழங்கிய கத்துக்குட்டி குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil