Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமர்சனம் - 10 எண்றதுக்குள்ள

விமர்சனம் - 10 எண்றதுக்குள்ள

ஜே.பி.ஆர்.

, வெள்ளி, 23 அக்டோபர் 2015 (10:48 IST)
கோலிசோடாவை தந்த விஜய் மில்டனின் படம் என்று போனால் காலிசோடாவை தந்து ஏமாற்றுகிறார்கள்.


 

 
இரண்டாவது படத்திலேயே இப்படியொரு கற்பனை வறட்சியா விஜய் மில்டன் சார்...?
 
பத்து எண்றதுக்குள்ள எந்த வேலையும் செய்து முடிக்கிற பலசாலி விக்ரம். டிரைவிங் ஸ்கூலில் கார் ஓட்ட கற்றுத் தரும் அவர் லோக்கல் தாதா பசுபதிக்காக அவ்வப்போது கார்களையும் கடத்துகிறார். எல்லாம் காசு மணி துட்டுக்காக. 
 
விக்ரமிடம் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வருகிறார் சமந்தா. தனது அழகான முகத்தில் அப்பாவியாக சில ரியாக்ஷன்களை காண்பித்து படத்தின் முற்பாதியை கொஞ்சமோ கொஞ்சம் தாங்கிப் பிடிக்கிறார். காரை மரத்தில் மோதிவிட்டு அவர் காண்பிக்கும் முகபாவத்தில் நளபாகத்தின் ருசி.
 
கண் தெரியாதவர், கால் நொண்டி என்று குறைபாடுள்ள கதாபாத்திரம்தான் விக்ரமுக்கு சரி. மாஸ் ஹீரோவாக அவர் நடிக்கிற படங்களெல்லாம் ராஜபாட்டையாகிவிடுகிறது. ரொமான்சும் சரி, காமெடியும் சரி, சீயானுக்கு கடுகளவுதான் வருகிறது. படத்தில் கதையும் இல்லையா... கரைசேர்வதற்குள் நுரை தள்ளிவிடுகிறது. 
 
உத்தர்காண்டுக்கு விக்ரம் ஒரு காரை கடத்த வேண்டி வருகிறது. பாதி வழிபோய் பார்த்தால் காரில் மயக்க நிலையில் இருக்கிறார் சமந்தா...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

விக்ரம் கடத்துவது காரை அல்ல, காதலியை என்று தெரிந்த பின் படம் எப்படி பாய்ந்திருக்க வேண்டும்? வளவள வில்லன்களும் தொள தொள திரைக்கதையும் இரண்டாம் பாதியை நெளிய விடுகின்றன.
 
கிளைமாக்ஸில் வரும் சாதி வெறி வில்லி கதாபாத்திரம் செம ட்விஸ்டாக இருக்கும் என நினைத்து வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. பாவம், ரசிகர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.

webdunia

 

 
நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்தில் டாக்டரேட் வாங்கிடுவார் போலிருக்கிறது பசுபதி. அம்சமான நடிப்பு. படத்தில் வரும் பிற வில்லன்கள் ஸ்பீடு பிரேக்கர்கள்.
 
ஆக்ஷன் படம் என்றதும் வீட்டிலிருக்கும் எல்லா இன்ஸ்ட்ரூமெண்டையும் டி.இமான் ஸ்டுடியோவுக்கு கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது. காது கிழிகிறது. ஆறுதலாக விஜயலட்சுமியின் ஒரேயொரு பாடல் மட்டும்.
 
பாஸ்கரனின் கேமரா வித்தை காட்டுகிறது. படத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரே அம்சம், ஒளிப்பதிவு.
 
கதை முக்கியம், அதனை சுவாரஸியமாக சொல்வது அதிமுக்கியம். இந்த இரண்டுமே இல்லாமல் வந்திருக்கிறது, 10 எண்றதுக்குள்ள. வெரி ஸாரி விக்ரம்.

Share this Story:

Follow Webdunia tamil