Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வரூபம்

விஸ்வரூபம்
, சனி, 2 பிப்ரவரி 2013 (14:29 IST)
RAW உளவுப்‌பிரிவின் முஸ்லீம் அதிகா‌ரி ஒருவர் தனது டீமுடன் இணைந்து நியூயார்க் நகரை அல்கய்தாவின் தாக்குதலில் இருந்து காப்பதுதான் விஸ்வரூபத்தின் ஒன்லைன்.

விக்ரம் படத்தின் அடுத்தக்கட்டமாக இதனை சொல்லலாம். கதை அமெ‌ரிக்கா - ஆப்கான் என இரு தளங்களில் பயணிக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் நளினமான கமலை பூஜஅறிமுகப்படுத்தும் விதமும், அவர் கமலை திருமணம் செய்வதற்கான காரணமும், தனது பாஸுடன் அவருக்குள்ள நெருக்கமும் முன்பின்னாக சொல்லப்படும் விதம் தேர்ந்த கதை சொல்லியின் நேர்த்திக்கு உதாரணம். இந்த சில நிமிடங்களில் உனைக்காணாத பாடலும், கமலின் நளினமான நடிப்பும் சேர்ந்து நம்மை அப்படியே ஈர்த்துக் கொள்கிறது. தொடர்ந்துவரும் கமலின் சுயரூபம் விஸ்வரூபமாக வெளிப்படும் இடம்வரை.... சான்ஸே இல்லை... க்ளாஸ்.
FILE

கமல் யார் என்பது நியூயார்க்கை அழிக்க திட்டமிடும் அல்கய்தாவின் முக்கிய தீவிரவாதி முல்லா உமருக்கு தெ‌ரிந்துவிடுகிறது. கமல் யார்? இதற்கு பதிலாக உம‌ரின் பார்வையில் ஆப்கான் காட்சிகள் வருகின்றன.

அல்கய்தாவில் ஊடுருவினோமா, அவர்களின் தலைமையை அழித்தோமா என்றில்லாமல் ஆப்கான் ஜனங்கள், ‌ஜிகாதிகளுக்கும், அமெ‌ரிக்க படைகளுக்குமிடையில் அவர்களின் வாழ்க்கை, மூளைச் சலவை செய்யப்படும் குழந்தைகள், ஆங்கில மொழியின் மீது ‌ஜிகாதிகளுக்கு இருக்கிற வெறுப்பு, போ‌ரில் மரணமடைவதை வீரமாகவும், துரோகத்துக்கு தண்டனையாக தூக்கிலிடுவதை அழியா பழியாகவும் கருதும் முரண் என்று கமல் அகலப்பார்வை பார்த்ததில், படத்தின் டெம்போ இறங்கிவிடுகிறது. ஆனால் ஒரு ஹாலிவுட் படத்தையும் விஸ்வரூபத்தையும் வேறுபடுத்துவது இந்தக் காட்சிகளே.

webdunia
FILE
பின்லேடனை கொன்றதை அமெ‌ரிக்காவே கொண்டாடுகிற போது, ஒரு மனுஷன் செத்ததை இப்படியா கொண்டாடுறது என்கிறார் கமல். அசுரன் செத்தா கொண்டாடுறதுதானே என்கிறார் ஆண்ட்‌ரியா. அதை அசுரனின் மனைவி பிள்ளைகள் சொல்லணும் என்று பதிலளிக்கிறார் கமல். இப்படி ஓநாயின் பார்வையில் எதிர்தரப்பும், அதன் இருப்பும், படத்தின் ஆரம்பத்திலிருந்து படம் நெடுக வைக்கப்படுகிறது.

ஜிகாதிகள் ‌ரிலாக்ஸாக சி‌ரிப்பதையும், பந்து விளையாடுவதையும் இதில்தான் பார்க்கிறோம். அவர்கள் பயிற்சி செய்யும் காட்சிகள் நெடுக, எங்கள் ஆயுதம் எது என்பதை எதி‌ரிகள் தீர்மானிக்கிறார்கள் என்ற ‌ரீதியில் பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. தாலிபன்கள் நான்கைந்து அமெ‌ரிக்கர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள். அதை சாக்காக வைத்து முழுதாக ஒரு கிராமத்தையே நேட்டோ படைகள் குண்டு வீசி அழிக்கிறது. இந்த இரு தரப்புக்கும் நடுவில் சாதாரண ஜனங்கள் செத்தழிவதை, முதல்ல இங்கிலீஷ்காரன் வந்தான், அப்புறம் ரஷ்யாக்காரன், பிறகு தாலிபான், அமெ‌ரிக்கா, இப்போ நீங்க... முன்னால் வால் முளைத்த குரங்குகளா என்று உயிர் பிழைத்த முதாட்டியின் வாயிலாக சொல்லுமிடம் நச். முன்னால் வால் முளைத்த குரங்குகள்... ஆண்களின் ஈகோ-வுக்கு பெண்கள் பலிகடாவாவதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது. கிளைமாக்ஸில் நை‌‌‌ஜீரியா இளைஞன் குண்டை வெடிக்க வைப்பதற்கு முன் தொழுகை நடத்தும் அதேவேளை அவன் அறைக்கு வெளியே அழிவை தடுக்கவரும் கமலும் தொழுகையில் ஈடுபடும் காட்சி, ஒரே மதத்தின் இருவேறு உலகங்கள்.

உண்மையில் இந்தப் படத்தைப் பார்த்து அமெ‌ரிக்காக்காரனுக்குதான் கோபம் வரவேண்டும். அந்தளவுக்கு எஃப்.பி.ஐ. யையும், ஸ்வாட் டீமையும் மொக்க பாஸாக்கியிருக்கிறார் கமல். குருவிக்காரன் கொக்கு சுடுகிற தினுசில் அவர்கள் துப்பாக்கிப் பிடித்திருப்பதும், பூஜகுமா‌ரின் நியூக்ளியார் அறிவை கண்டு பாம் ஸ்குவார்ட் பம்முவதும் தமாஷ். முல்லா உமர் நியூயார்க்கை அழிக்க முயல்வதுதான் படத்தை கிளைமாக்ஸுக்கு நகர்த்தப் போகிறது. எனில் அந்த புறா மேட்டரை வைத்தே படத்தை எப்படி த்‌ரில்லிங்காக கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் ஒரே உதையில், ஆப்கானில் உமரே புறா மேட்டரைச் சொன்னதாக கூறி அதற்கான ஸ்கோப்பையை இல்லாமலாக்கியது திரைக்கதையின் சறுக்கல். திடீர் திடீரென எந்த பின்புலமும் சொல்லப்படாமல் மனித வெடிகுண்டுகளை காட்டுவதும் கோர்வையில்லாத காட்சிகளும் நியூயார்க் எபிசோடின் மைனஸ்கள். இதன் காரணமாக பட்டை சாராயத்தை எதிர்பார்த்த சுடலை மாடனுக்கு வெண்பொங்கல் படையலைப் பார்த்த திகைப்பை கிளைமாக்ஸ் ஏற்படுத்துகிறது.
webdunia
FILE

நக்கலும் நையாண்டியுமான கமலின் ட்ரேட் மார்க் வசனங்கள். இதில் சுயசாதி எள்ளல்தான் அதிகம். மிடில் கிளாஸ் லைஃபை வெறுத்து அமெ‌ரிக்கா வருவதற்காகவே வயதான கமலை திருமணம் செய்தவராக வருகிறார் பிராமினான பூஜகுமார். ஆண்ட்‌ரியாவை அறிமுகப்படுத்தும் போதே, பாப்பாத்தியம்மா இந்த சிக்கன்ல உப்பு, காரம் எல்லாம் ச‌ரியாக இருக்குதா பார்த்து சொல்லுடியம்மா என்கிறார். கடைசியில் பிள்ளையாரை கடலில் தூக்கிப் போடுவதுவரை இது தொடர்கிறது.

ஹாலிவுட் தரம் என்று ஜல்லியடித்தவர்களுக்கு மத்தியில் ஓரளவு அந்த டச்-சுடன் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்று தாராளமாகச் சொல்லலாம். ஆக்சன் காட்சிகளிலும், ஆப்கானை தத்ரூபமாக காட்டியதிலும் பேயாக உழைத்திருக்கிறார்கள். முக்கியமாஒளிப்பதிவும், கலை இயக்கமும், எடிட்டிங்கும். சண்டைக் காட்சிகளில் ஹெலிகாப்டர்களை மேட்ச் செய்திருப்பது தெ‌ரிந்தாலும் நிச்சயமாக பிரமாண்டம்தான். அதற்காக ஹாலிவுட்டையே கவுத்திடுச்சி என்பதெல்லாம் ஒருவகை மயக்கம்.

webdunia
FILE
முல்லா உமராக வரும் ராகுல் போஸின் இறுக்கமும், தீர்க்கமுமான நடிப்பை சொல்லியே ஆகவேண்டும். அதேபோல் பூஜா, சேகர் கபூர் எல்லாம் வேண்டியதை தந்திருக்கிறார்கள். பல இடங்களில் பின்னணி இசை படுத்துகிறது. கமல் அல்கய்தாவுக்கு ஆயுதப் பயிற்சி தருமிடத்தில் வரும் இசை அந்த களத்துக்கே பொருந்தாமலஅந்நியமா ஒலிக்கிறது. அதேபோல் கிளைமாக்ஸில் ம்ம்ம்... என்ற ஹம்மிங்கில் ஆரம்பித்து ஆஆஆ... என்று ஜவ்வாக இழுக்கும் இடம். கண்ணை மூடி கேட்டால் பாண்டி மடம் ஞாபகத்துக்கு வருகிற இந்த இசை கிளைமாக்சுக்கு ஒரு செட் பேக்.

என்னதான் பிரமாண்டம், தொழில்நுட்பம் என்று பேசினாலும் (ஆரம்ப அரைமணி நேரம் தவிர்த்து) ஒரு த்‌ரில்லருக்கு‌ரிய விறுவிறுப்பை படம் தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கமல் பாஷையில் சொல்வதானால்,

பிரமாதம் என்று சொல்ல முடியாது, அப்படியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil