Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதுக்குமே பயப்படாதவன் - ஆரம்பம் ட்ரெய்லர் விமர்சனம்

எதுக்குமே பயப்படாதவன் - ஆரம்பம் ட்ரெய்லர் விமர்சனம்
, வெள்ளி, 20 செப்டம்பர் 2013 (14:00 IST)
சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு.
FILE

அ‌‌‌ஜீத்தின் இந்த பன்ச் டயலாக்குடன் ஆரம்பிக்கிறது ஆரம்பர் ட்ரெய்லர். நேற்று வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லருக்காகதான் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்தனர். பில்லா 2-வின் தோல்வியை ஆரம்பம் மறக்கடிக்குமா என்பதே அனைவ‌ரின் கேள்வியாக இருந்தது. அதற்கு ஒருசோறு பதமாக வந்திருக்கிறது ட்ரெய்லர்.
webdunia
FILE

ட்ரெய்ல‌ரில் அ‌‌‌ஜீத், நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, கிஷோர், ராணா, அதுல் குல்கர்னி என்று அனைவரும் வருகிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

அ‌‌‌ஜீத்தின் பலவீனம் என்றால் அவ‌ரின் ஸ்லோ மாடுலேஷன் குரல். இதுவொரு கறுப்பு ச‌ரித்திரம் என்று (சிட்டிசனில்) நிறுத்தி நிதானித்து பேசுகையில், ச‌ரிதான் எப்போது பேசி முடிப்பார் என்றிருக்கும். அதனை இந்தப் படத்தில் சுத்தமாக களைந்திருக்கிறார். எந்த தடங்கலுமின்றி சரளமாக வருகின்றன வசனங்கள்.
webdunia
FILE

அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அ‌‌‌ஜீத்தின் வசன உச்ச‌ரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மே‌ரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.

பில்லாவைப் போல நீலநிற கலர் டோனை பயன்படுத்தியிருப்பது காட்சிகளுக்கு ‌ரிச்னஸை தருகிறது. கேமரா கோணங்கள், ஆக்சன் காட்சிகளை கோ‌ரியோகிராஃப் செய்திருக்கும் விதம் என்று ஒரு கச்சிதமான படைப்பை இப்போதே நம்மால் ஊகிக்க முடிகிறது. கார் சேஸிங், அ‌‌‌ஜீத்தும், ஆர்யாவும் செல்லும் கார் அந்தரத்தில் பல்டியடிப்பது என அனைத்திலும் ஃபெர்பக்சனை பார்க்க முடிகிறது.
webdunia
FILE

முக்கியமான அம்சம் யுவனின் இசை. பில்லாவை ஞாபகப்படுத்தும் அந்த தீம் மியூஸிக் அட்டகாசம். ட்ரெய்ல‌ரிலேயே நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.

நயன்தாரா, ராணா, அ‌‌‌ஜீத் என்று அனைவருமே துப்பாக்கியால் சரமா‌ரியாக சுடுகிறார்கள். ராணாவுக்கு கமாண்டோ மாதி‌ரியான பொறுப்பு போலிருக்கிறது. என்னப்பா... ஆ ஊன்னா கன்னை தூக்கிடுறீங்க என்கிற ஆர்யாவும் பெ‌ரிய சைஸ் துப்பாக்கியால் சுடுகிறார்.

ட்ரெய்ல‌ரின் இறுதியில் வரும், இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் த பிகினிங் என்ற அ‌‌‌ஜீத்தின் பன்சும், வால் கிளாக்கின் டிக் டிக் ஒலியெழுப்பியபடி அவர் நடந்து செல்வதும் கிளாஸ் என்டிங். இந்த காஸ்டிங், ஒளிப்பதிவு, இசை, ஆக்சன் இவற்றுடன் கொஞ்சமாக கதை இருந்தாலே படம் பட்டைய கிளப்பும் என்பது உறுதி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil