Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"ஆடை அணிந்திருப்பாள் ஆனால், நிர்வாணமாக இருப்பாள்" - முன்னோட்ட விமர்சனம்!

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (15:43 IST)
அமலா பாலின் தரமான நடிப்பில் தயாராகியுள்ள ஆடை படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாளை திரைக்கு வரவிருக்கிறது. தற்போது  இப்படத்தின் முன்னோட்டத்தை இங்கே காணலாம் 


 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அமலா பால் விசித்திரமான கதாபாத்திரத்தை கையிலெடுத்து தன் தைரியமான நடிப்பால்  ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் படம் வெளியாவதற்கு முன்பே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.  
 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும்  "ஆடை"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரைலர் ,டீசர் என அத்தனையும் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து நாளை ரிலீசாகவுள்ளது. 


 
நண்பர்களுடன் சேர்ந்து தன் இஷ்டத்துக்கு சுற்றித்திரியும் அமலா பால் (காமினிகுடி, போதை , புகைபிடித்தல் என அத்தனை கெட்ட பழக்கங்களையும் கைவந்த கலையாக வைத்துள்ளார். மேலும் எதற்கெடுத்தாலும் "பெட் ..பெட்" என்று பெட் கட்டினாள் அது எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் துணிந்து செய்கிறார். ஒரு கட்டத்தில் இதற்கு அடிமையாகி  ஆடையின்றி பிறந்தநாள் கொண்டாடுமளவிற்கு துணித்து மிகப்பெரிய கட்டிடம் ஒன்றில் பல ஆண்களுக்கிடையில் மாட்டிக்கொள்கிறாள்.  பின்னர் குடி போதை தெளிந்து நிர்வாணமாக இருப்பதை  கண்டு  அதிர்ந்து போய், தனது நிர்வாண உடலை மறைத்து அத்தனை ஆண்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்  என்ற விறுவிறுப்பான பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. 
 
அமலா பாலின் நிருங்கிய தோழியாக இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெறந்த மேனிக்கு திரியும் அமலா பாலின் ஆடை படம் நாளை வெளிவந்து நன்றாக ஓடுமா..! பெட் கட்டுங்கள் பார்ப்போம்..! 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

என் மகன் இறந்துவிட்டான்.. துயர செய்தி ட்விட்டரில் பகிர்ந்த நடிகை திரிஷா

லப்பர் பந்து படம் மிகச்சிறப்பான படம்… பாராட்டிய மோகன்லால்!

அடுத்த கட்டுரையில்
Show comments