Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ - குவாட்டர் கட்டிங்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2010 (16:28 IST)
WD
ஒய் நாட் புரொட‌க்சன், கிளவுட் நைன் இணைந்து வ குவாட்டர் கட்டிங் படத்தை தய ா‌ ரித்துள்ளன. ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத ்‌ ரியின் இரண்டாவது படம் இது. இதில் வ என்பது படத்தின் பெயர். இதற்கு தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது குவாட்டர் என்ற பொருள். குவாட்டர் கட்டிங் என்பது படத்தின் கேப்ஷன்.

வெளிநாட்டு வேலைக்காக சென்னை வருகிறார் சிவா. மறுநாள் அவர் வெளிநாடு கிளம்ப வேண்டும். அதற்கு முதல் நாள் இரவு தனக்கு விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.‌பி.சரண். இவர் சிவாவின் அக்காவை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர். அந்த ஒரு நாள் இரவு சென்னையில் அவர்கள் எதிர்கொள்ளும் நபர்களும், பிரச்சனைகளும்தான் படத்தின் கதை.

ஹீரோயினாக லேகா வாஷிங்டன் நடித்துள்ளார். இசை ‌ஜ ி. வி.பிரகாஷ்குமார். உன்னை கண் தேடுதே பாடலை ‌ரீமிக்ஸ் செய்துள்ளனர். அத்துடன் பிரகாஷ்குமாரும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தி வார்த்தைகள் நிறைந்த ஒரு பாடலை சிவா எழுதியுள்ளார்.

சென்னை நக‌ரின் இரவு வாழ்க்கையை திரையில் கொண்டு வருவதற்காக இந்தப் படத்தை எடுத்திருப்பதாக புஷ்கர் - காயத ்‌ ரி தெ‌ரிவித்துள்ளனர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் முக்கியமான அம்சங்கள்.

இரண்டு மணி நேரம் ச ி‌ ரித்துவிட்டு வர வ குவாட்டர் கட்டிங் உத்தரவாதம் என்கின்றனர் இயக்குனர் தம்பதிகளான புஷ்கரும் காயத ்‌ ரியும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

இந்தியன், முதல்வன் & சிவாஜி ஆகிய மூன்று பேரும் ஒரே படத்தி… ஷங்கர் போட்ட திட்டம்!

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

Show comments