Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே மாதரம்

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2010 (14:12 IST)
WD
பொற்காலம், மறுமலர்ச்சி போன்ற தரமான படங்களை தய ா‌ ரித்த ஹென்றியின் பங்க‌ஜ் புரொடக்சன்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், மலையாளத்தில் தய ா‌ ரித்திருக்கும் படம் வந்தே மாதம்.

அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நாயகன்களாக மம்முட்டி, அர்ஜுன் நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

அர்ஜுன் இதில் போலீஸ் உயரதிக ா‌ ரியாக நடித்துள்ளார். மம்முட்டிக்கு ஜே ாடி சினேகா. அவர் விமான பைலட்டாக நடித்துள்ளார். பைலட்டாக சினேகா நடிப்பதும் இதுவே முதல்முறை.

டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு. வைரமுத்து, நந்தலாலா, சினேகன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

ஆக்சன் படமான இதற்கு புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்திருப்பதாக இயக்குனர் தெ‌ரிவிக்கிறார். பாலிவுட்டைச் சேர்ந்த ஆலன் அமீன், அனல் அரசு ஆகியோர் சண்டைப் பயிற்சி அளித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட்டாக இருக்கும்.

வரும் வெள்ளிக்கிழமை வந்தே மாதரம் திரைக்கு வருகிறது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments