Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ரியானை பார்க்கும் முன் இதை தெ‌ரிஞ்சுக்குங்க

Webdunia
புதன், 17 ஜூலை 2013 (20:17 IST)
பரத்பாலா இயக்கியிருக்கும் ம‌ரியான் வரும் வெள்ளிக்கிழமை - ஜூலை 19 - திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
FILE

தமிழில் சர்வதேச பிரச்சனைகளின் பின்னணியில் படங்கள் வருவதில்லை. விஸ்வரூபம் விதிவிலக்கு. ம‌ரியானில் சூடானில் உள்ள எண்ணைய் எடுக்கும் தொழிற்சாலையில் பணிப ு‌ ரிகிறவராக தனுஷ் நடித்திருக்கிறார். அவரையும் உடன் பணிப ு‌ ரிகிற சிலரையும் தீவிரவாதிகள் (கொள்ளைக்காரர்கள்?) கடத்துகிறார்கள். அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். நமிபியா போன்ற ஆப்ப ி‌ ரிக்க நாடுகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களைப் பற்றி செய்திகளில் படித்திருப்போம். அவர்களைப் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள், எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள் என்பதை ம‌ரியானை பார்த்து தெ‌ரிந்து கொள்ளலாம். படத்தில் அண்டர் வாட்டர் காட்சிகள் வருகின்றன. அதனை அந்தமானில் படமாக்கியிருக்கின்றனர். தனுஷ் தண்ணீருக்கு அடியில் நடித்திருக்கிறார்.
FILE

தனுஷுக்கு நீச்சல் தெ‌ரியாது. தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடைத்தபடி நீந்துவதில் சுத்தமாக அனுபவமில்லை. அதனால் பயிற்சியாளர் ஒருவரை வைத்து நீச்சல் கற்று, குறிப்பிட்ட காட்சியில் நடித்தார். பார்க்க அற்புதமாக இருக்கும். படத்தில் இதேபோல் வரும் நல்ல காட்சிகளில் எல்லாம் மிகுந்த சிரமத்துக்குள்ளானார் தனுஷ் என்று பரத்பாலா குறிப்பிடுகிறார்.

ஹீரோயின் பார்வதி. ரொமான்டிக் காட்சிகளில் பூ பார்வதியா என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார். ஆம்பளத்தனமான காதல். ஆதாமின்ட மகன் அபு படத்துக்காக தனுஷுடன் தேசிய விருதை பகிர்ந்து கொண்ட மலையாள நடிகர் சலீம் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற அப்புக்குட்டியும் உண்டு.

இன்னொருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

FILE

தனது வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கியவர் என்பதால் கதைகூட கேட்காமல் பரத்பாலாவின் படத்துக்கு இசையமைக்க சம்மதித்தார் ரஹ்மான். ஏழு பாடல்கள். ஏழுவிதமான உணர்வுகளை தரக்கூடியது. முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா ரஹ்மானின் இசையில் பாடியிருக்கிறார். தனுஷ் பாடல் எழுதியிருக்கிறார்.

சிறுபத்த ி‌ ரிகை, குறும் படங்கள், ஆவணப்படங்கள் என இயங்கி வரும், முலைகள், பூனையைப் போல அலையும் வெளிச்சம் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்ட குட்டி ரேவதி முதல்முறையாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் (கடைசியாகவும் இருக்கக்கடவது). வாலி, கபிலன் ஆகியோரும் பாடல் புனைந்துள்ளனர்.

Mark Koninck x என்ற பிரெஞ்ச் கேமராமேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தய ா‌ ரிப்பு ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

ஒருமுறை பார்க்கத் தகுந்த கச்சாப் பொருட்களுடன் வெளியாகிறது ம‌ரியான். பலமுறை பார்க்கிற மாத ி‌ ர ி பரத்பாலா எடுத்திருக்கிறாரா என்பது 19 ஆம் தேதி தெ‌ரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments