Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலினி 22 பாளையங்கோட்டை - ஸ்ரீப்ரியாவின் சமூக கோபம்

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2014 (10:48 IST)
22 பீமேல் கோட்டயம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். இயக்கியவர் ஆஷிக் அபு. ஆண்களால் திட்டமிட்டு சூறையாடப்படும் பெண் அவர்களை பழிவாங்குவதுதான் படத்தின் நாட். பூ ஒன்று புயலானது விஜயசாந்தி கதைதான். ஆனால் ஆஷிக் அதனை கையாண்டவிதம் ரொம்ப மாடர்ன்.
FILE

முக்கிய குற்றவாளியான ஃபகத் ஃபாசிலுக்கு பாதிக்கப்பட்ட பெண் ரிமா கல்லிங்கல் தரும் தண்டனை சவுதி அரேபியா பாணி. அங்கு திருடினால் கையை வெட்டுவார்களாம். இங்கே ஃபகத்தின் அதை நறுக்குகிறார் ரிமா.

இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரா க...

நடக்கும் குற்றங்களால் ஏற்பட்ட அறச்சீற்றம்தான் இந்தப் படத்தை ரிமேக் செய்ய காரணம் என்று சீறுகிறார் படத்தை ரிமேக் செய்திருக்கும் ஸ்ரீப்ரியா. ஒருகாலத்தில் இவர் காட்டிய கவர்ச்சியை இப்போது மறந்துவிட்டார் போலும். ஸ்ரீப்ரியாவின் கணவர்தான் தயாரிப்பு.
FILE

சம்பிரதாயங்களை சைலண்டாக நொறுக்குவதுதான் ஆஷிக் அபுவின் ஸ்டைல். இதற்காக மரபை காலி செய்கிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒரு கண்டெய்னர் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் செய்கிறார். தண்ணி அடிப்பது, ஃப்ரி செக்ஸ், பழிவாங்குவதற்காக உதவி செய்கிற ப ொ pய மனிதனுடன் படுப்பது என்று சகல சினிமா இலக்கணங்களையும் இதில் மீறியிருந்தார். தமிழில் அதனை எந்தளவு ஸ்ரீப்ரியா கொண்டு வந்திருக்கிறார் என்பது கேள்வி.

இந்தப் படத்தின் போதுதான் ஆஷிக் அபுவும், ரிமா கல்லிங்கலும் நெருக்கமாகி திருமணம் செய்து கொண்டனர். மாலினி 22 பாளையங்கோட்டையில் ரிமா கல்லிங்கல் நடித்த வேடத்தில் நித்யா மேனன். அரவிந்த சங்கர் இசையமைத்துள்ளார். இரண்டு மணி பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

நாளை 24 ஆம் தேதி படம் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!