Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெடிகேஷனுக்கு உதாரணம் ஷாமின் 6

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2013 (10:51 IST)
சமூக வலைதளத்தில் இப்படிதான் கன்னட நடிகர் சுதீப் கமெண்ட் செய்திருக்கிறார். படம் நாளை வெளியாகும் முன்பே அதனை பார்க்கிற அதிர்ஷ்டம் சுதீப்புக்கு கிடைத்தது. படத்தைப் பார்த்தவர் புகழ்ந்து கொண்டேயிருக்கிறார். குறிப்பாக ஷாமின் மெய் வருத்திய உழைப்பை.
FILE

ராம் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். அது அவரை ஆறு மாநிலங்களுக்கு துரத்தியடிக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமான அனுபவம். ஆறு் படத்தின் ஏகதேச கதை இது.

ஷாம் ஆறு வித்தியாசமா ன...

FILE
கெட்டப்புகளில் வருகிறார். ஒவ்வொன்றும் மிரட்டுகிறது. படத்தின் ஹைலைட்டே அவரின் கெட்டப்புகள்தான். முகவரி, நேபாளி படங்களை இயக்கிய விஇசட்.துரை படத்தை இயக்கியுள்ளார்.

ஷாம் தனது கெட்டப்புகளுக்காக சுமார் 3 வருடங்கள் உழைத்திருக்கிறார். கண்களை உப்ப வைக்கும் கேரக்டருக்காக பல நாட்கள் தூங்காமல் விழிந்திருந்து மெனக்கெட்டிருக்கிறார். இன்னும் சில நாட்கள் அதனை தொடர்ந்திருந்தால் அவரின் பார்வையே பறிபோயிருக்கும் என்கிறார்கள்.

மலையாளத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஜெகதி ஸ்ரீகுமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை, மதி ஒளிப்பதிவு. ஷாம் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை வைத்திருக்கும் இந்தப் படம் நாளை வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments