Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

Webdunia
பார்த்திபன் கனவ ு, சதுரங்கம ், சிவப்பதிகாரம் படங்களைத் தொடர்ந்து நான்காவது படத்துக்கு தயாராகிவிட்டார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

முதல் மூன்று படங்களுக்கும் பிரபலமாக பேசப்பட்ட புத்தகங்களின் தலைப்பை வைத்த மாதிரி.. இந்த முறையும் அதே வழியை பின்பற்றி தலைப்பு வைத்திருக்கிறார்..."பிரிவோம் சந்திப்போம்".

ஆட்டோகிராஃப ், தவமாய் தவமிருந்த ு, மாயக்கண்ணாடி என தொடர்ந்து தானே நடித்து இயக்கிக் கொண்டிருந்த சேரன் இந்த முறை நடிகராக மட்டும் களம் இறங்குகிறார். இவர் ஏற்கெனவே தங்கர்பச்சான் இயக்கத்தில் "சொல்ல மறந்த கதை" படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் தலைப்ப ு, கதை இரண்டையும் மிக கவனமாக கையாளக்கூடிய படைப்பாளிகள் இருவரும் புதிய கூட்டணி போட்டிருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்.

" கனவுக்கும் காதலுக்கும் எவ்வளவு நெருக்கம் இருக்கிறதோ.. அதே அளவுக்கு இடைவெளியும் இருக்கிறது என்கிற காதலின் மூன்றாம் பரிமானத்தைப் பற்றி பேசப் போகின்ற படம் இது. வலிமையான கதையைக் கொண்டிருக்கும் இந்த படம் எல்லோரும் ரசிக்கும் படியாகவும் ஜனரஞ்சகமாகவும் இருக்கும்" என்று படத்தை பற்றிச் சொல்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன். படத்தில் சேரனுக்கு ஜோடியாக கமலினி முகர்ஜி நடிக்கிறார்.

வித்யாசாகர் இசையில் கபிலன ், யுகபாரத ி, பா.விஜய் பாடல்கள் எழுதுகிறார்கள். எம்.எஸ ். பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு - சரவணா. கலை ராஜீவன். ஞானம் பிலிம்ஸ ் பிரைவேட் லிமிடேட் சார்பில் அ.சுபாஸ்கரன் தயாரிக்க.. கத ை, திரைக்கத ை, வசனம் எழுதி இயக்குகிறார் கரு.பழனியப்பன்.

மார்ச் 28ம் தேதி பாடல் பதிவுடன் படம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து திருச்ச ி, தஞ்சாவூர ், சென்னை மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

பிரியங்கா காந்தியை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்துள்ளேன் – கங்கனா ரனாவத்!

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

Show comments