Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் குஷி.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
திங்கள், 29 ஜூலை 2024 (09:42 IST)
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்றம் கண்டது என்பதும் சென்செக்ஸ் 1200 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய லாபத்தை அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்ந்து 81 ஆயிரத்து 676 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 922 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, ஐடிசி, ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இனி வரும் காலத்தில் பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்றும் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் புதிதாக பங்கு சந்தையில் நுழைபவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments