Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டால் வீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (10:05 IST)
பட்ஜெட் தினத்தன்றும், அதன் பின்னரும் சில நாட்கள் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. 
 
பொதுவாக பட்ஜெட் தினத்திலும் அதன் பிறகு சில நாட்கள் பங்கு சந்தை உயரும் என்ற நிலையில் இந்த ஆண்டு நேர்மாறாக பட்ஜெட் தினத்திலும் அதன் பிறகு இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது 
 
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் ஆரம்பித்த நிலையில் சென்செக்ஸ் 473 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 517 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 166 புள்ளிகள் உயர்ந்து 24, 673 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளதாகவும் எச்.டி.எப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments