Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை அபாரம்.. மீண்டும் 80000 தாண்டிய சென்செக்ஸ்..!

Siva
வெள்ளி, 12 ஜூலை 2024 (09:22 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக சிறிய அளவில் சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்று மீண்டும் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை தாண்டி உள்ளதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்து 80 ஆயிரம் என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 385 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, பாரத ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டிருப்பதும் மீண்டும் 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments