4வது நாளாக சரிந்த தங்கம் விலை.. சென்னையில் இன்று சவரன் எவ்வளவு?

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:09 IST)
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக இறங்கி வந்த நிலையில் இன்று நான்காவது நாட்களாகவும் நாளாகவும் இறங்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்னும் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதால் இன்னும் விலை இறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் மற்றும் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு ஒரு கிராம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி விலை எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய்   7,050 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து  ரூபாய் 56,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,505  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments