தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (10:58 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாகவும் வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய்   6,800 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 54,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,270 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments