ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 20 மே 2024 (10:15 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஒரு சவரன் 55 ஆயிரத்தை தாண்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதேபோல் முதன்முதலாக ஒரு கிலோ வெள்ளி விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,900 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 55,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,370 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,100.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments