Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Siva
வியாழன், 21 மார்ச் 2024 (10:49 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 95 ரூபாயும் ஒரு சவரனுக்கு 760 ரூபாயும் உயர்ந்துள்ளது  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,235 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 49,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6705 எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 150 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 81.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments