ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (10:38 IST)
விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்றைய திடீரென தங்கம் விலை  40 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக ஒரு கிராமுக்கு 15 ரூபாய் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5555.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து  ரூபாய் 44440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6022.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48176.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 150 காசுகள் சரிந்து  ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments