அதானி விவகாரத்தால் மீள முடியாமல் திணறும் பங்குச்சந்தை.. இன்றும் சரிவு..!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (09:57 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நன்றாக உயர்ந்து கொண்டு வந்த நிலையில் அதானி விவகாரம் காரணமாக படுவீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் பங்குச்சந்தை மீள முடியாமல் திணறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 390 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20 புள்ளிகள் சரிந்து 17,740 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்னும் ஒரு சில நாட்களில் பங்குச் சந்தை மீண்டும் உயரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் கனமழை.. மழையிலும் குவிந்த பக்தர் வெள்ளம்! மழையில் நனைந்தபடி தரிசனம்..!

கனமழையால் காவிரி டெல்டாவில் குறுவை நெல் நாசம்: வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கிய ஈபிஎஸ்..!

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த மண்டலம்: புயலாக மாற வாய்ப்பா?

லண்டன் பல்கலைக்கழக பேராசிரியை இந்தியாவில் இருந்து நாடு கடத்தல்! என்ன காரணம்?

லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments