Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (11:44 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்து கொண்டே வந்தது. ஆனால், சமீப காலமாக பங்குச்சந்தை உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று வாரத்தின் முதல் நாளிலும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே உயர்ந்து கொண்டிருக்கிறது. சற்று முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்து, 74,624 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்து, 22,663 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் இந்துஸ்தான் லீவர், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல்,  ஸ்டேட் வங்கி, ஐடிசி, டிசிஎஸ், கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், எச்டிஎப்சி வங்கி,  ஜொமாட்டோ, இன்டஸ் இன்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்திய அணி வெற்றியை கொண்டாடியதில் மோதல்.. வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு..!

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments