Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை ஏற்றம்.. மதியத்திற்கு மேல் என்ன ஆகும்?

Siva
வெள்ளி, 23 மே 2025 (09:46 IST)
பங்கு சந்தை நேற்று சரிந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று காலை, பங்கு சந்தை பெரிய அளவில் ஏற்றம் காணாமல் வர்த்தகம் தொடங்கியது. மதியத்திற்கு மேல் மிகப் பெரிய அளவில் சரிந்து, கிட்டத்தட்ட சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை வீழ்ந்தது. அதன் பின்னர், 600 புள்ளிகள் மைனஸுடன் வர்த்தகம் முடிந்தது.
 
இந்த நிலையில், இன்று பங்கு சந்தை காலை முதலே ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகி வருவது, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று மும்பை பங்கு சந்தை 538 புள்ளிகள் வரை உயர்ந்து, 81,481 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 183 புள்ளிகள் உயர்ந்து 24792 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்கு சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல்,  எச்.டி.எஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், ஐ.டி.சி, கோடக் மகிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.
 
சன் பார்மா, ஹிண்டால்கோ உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்து வர்த்தகம் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments