பங்குச்சந்தையின் சரிவு தொடர்கிறது.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்..!

Siva
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (10:50 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சரிந்து கொண்டு வருவதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. சில நாட்களில் காலையில் உயர்ந்தாலும், மதியத்திற்கு மேல் மீண்டும் பங்குச்சந்தை சரிந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 400 புள்ளிகள் சரிந்து, 75,340 என்ற புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 129 புள்ளிகள் சரிந்து, 22,784 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் TCS, HDFC, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், இன்போசிஸ்,  ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில், சிப்லா, ITC, ஏஷியன் பெயிண்ட்ஸ், டைட்டான், HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, ஸ்டேட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: கோவை மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா.. பெயர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments